Yahoo! பதிப்புரிமைகள் மற்றும் பதிப்புரிமை முகவர்
Yahoo! மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமையை மதிக்கிறது, அதேபோல, அத்தகைய செயலை மேற்கொள்ளுமாறு எங்களது பயனர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். Yahoo! மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுகின்ற பயனர்களின் கணக்குகளை, உரிய சூழ்நிலைகளில், தன்விருப்புரிமையின் பேரில் நிறுத்திவிடக்கூடும்.
உங்களது படைப்பு, பதிப்புரிமை மீறலுக்கு சமமான வழியில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நீங்கள் நம்பும்பட்சத்தில், தயவுசெய்து பின்வரும் தகவல்களை Yahoo!’வின் பதிப்புரிமை முகவரிடம் வழங்கவும்:
- பதிப்புரிமை ஆதாயத்தின் உரிமையாளரின் சார்பாக செயல்பட அங்கீகரிக்கப்பட்டுள்ள நபரின் எலெக்ட்ரானிக் அல்லது கையாலான கையொப்பம்;
- மீறப்பட்டுள்ளதாக நீங்கள் கோருகின்ற பதிப்புரிமைபெற்ற படைப்பின் விவரம்;
- மீறப்படுவதாக நீங்கள் கோருகின்ற விசயம் தளத்தில் அமைந்துள்ள இடத்தின் விவரம்;
- உங்களது முகவரி, தொலைபேசி எண், மற்றும் ஈமெயில் முகவரி;
- சர்ச்சைக்குரிய உபயோகமானது பதிப்புரிமைக்கு சொந்தக்காரரால், அதன் முகவரால், அல்லது சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறித்து நீங்கள் நல்லெண்ண நம்பிக்கை கொண்டிருப்பது தொடர்பான உங்களது அறிக்கை;
- மேற்கூறிய தகவல், உங்களது அறிவிப்பில் துல்லியமாக இருக்கிறது என்பதையும், நீங்கள் பதிப்புரிமையின் சொந்தக்காரர் அல்லது பதிப்புரிமையின் சொந்தக்காரரின் சார்பாய் செயல்படுவதற்கான அங்கீகாரம் பெற்றவர் என்பதையும் தெரிவிக்கின்ற, பொய்யான தகவலளிப்பதற்கான தண்டனையின் கீழ் செய்யப்பட்ட, உங்களது அறிக்கை.
Yahoo!’வின், பதிப்புரிமை மீறலின் கோருதலின் அறிவிப்பிற்குரிய பதிப்புரிமை முகவரை, பின்வரும் முறையில் நீங்கள் தொடர்புகொள்ளலாம்:
அஞ்சல் மூலம்:
பதிப்புரிமை முகவர்
Yahoo இந்தியா பிரைவேட் லிமிடெட்
பிரிவு எண். 1261, 6வது தளம்,
கட்டட எண் 12, சாலிடேர் கார்பொரேட் பார்க்,
எண். 167, குரு ஹர்கோவிந்த்ஜி மார்க்,
(அந்தேரி-கட்கோபர் லிங்க் ரோடு),
அந்தேரி (கிழக்கு), மும்பை - 400 093
இந்தியா
ஈமெயில் மூலம்:
in-copyright@yahoo-inc.com
ஃபேக்ஸ் மூலம்:
+91 22 3308 9700