நீங்கள் கடந்த காலத்தில் Yahoo! தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உபயோகப்படுத்தியது தொடர்பான தகவல்கள் உட்பட Yahoo! சேகரிக்கும் அல்லது பெறும் சொந்த தகவல்களை, Yahoo! எப்படி கையாளுகிறது என்பதை இக் கொள்கை உள்ளடக்குகிறது. சொந்த தகவல்கள் என்பது உங்களுடைய பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, அல்லது தொலைபேசி எண் போன்ற உங்களை தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்துகின்ற உங்களைப் பற்றிய தகவல்களாகும், அத்துடன், இவை அனைவருக்கும் கிடைக்காததாக இருக்கும்.
இக்கொள்கை Yahoo!வுக்கு சொந்தமில்லாத அல்லது கட்டுப்பாட்டில் இல்லாத நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு, அல்லது Yahoo! பணியமர்த்தாத அல்லது மேலாண்மை செய்யாத மக்களுக்கு பொருந்தாது. கூடுதலாக, Yahoo! கையகப்படுத்தியுள்ள சில நிறுவனங்கள் தங்களது சொந்த மற்றும் ஏற்கனவே நடப்பிலுள்ள இரகசியக்காப்புல் கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன, இவற்றை எமது கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (acquired companies) என்ற பக்கத்தில் பார்க்கலாம்.
Yahoo! -வில் நீங்கள் பதிவு செய்யும் போது, Yahoo! தயாரிப்புகள் அல்லது சேவைகளை நீங்கள் உபயோகிக்கும் போது, Yahoo!வின் பக்கங்கள் அல்லது Yahoo! கூட்டாளிகளில் சில குறிப்பிட்ட பக்கங்களுக்கு நீங்கள் செல்லும் போது, மற்றும் விளம்பரங்கள் அல்லது உடனடி பரிசுகளுக்கான (sweepstakes) லாட்டரி போட்டிகளுக்குள் செல்லும் போது, Yahoo! சொந்தத் தகவல்களைச் சேகரிக்கிறது. Yahoo!, உங்களைப் பற்றிய எங்களிடம் இருக்கக்கூடிய தகவல்களை, நாங்கள் வியாபார கூட்டாளிகள் அல்லது மற்ற நிறுவனங்களிடமிருந்து பெறும் தகவல்களோடு ஒன்று சேர்க்கலாம்.
நீங்கள் பதிவு செய்யும் போது, உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், அஞ்சல் குறியீடு, பணி, துறை, மற்றும் சொந்த விருப்பங்கள் போன்ற தகவல்களை நாங்கள் கேட்கிறோம். சில நிதிசார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக, வழங்கப்பட்டிருந்தால், நாங்கள் உங்களுடைய முகவரி மற்றும் உங்களுடைய சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் கேட்கக்கூடும். நீங்கள் Yahoo! -வில் பதிவு செய்து எங்களுடைய சேவைகளுக்குள் நுழையும் போது, நீங்கள் யாரென்று எங்களுக்குத் தெரிந்திருக்கும்.
நிதிசார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டால், அவற்றை உபயோகிப்பது தொடர்பான உங்களது தகவல்கள் உட்பட நீங்கள் எங்களுடனும் எங்களது சில வியாபார கூட்டாளிகளுடன் செய்கின்ற பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களையும் Yahoo! சேகரிக்கிறது.
உங்களுடைய IP முகவரி, Yahoo! குக்கீ தகவல்கள், மென்பொருள் மற்றும் வன்பொருள் பண்புகள், மற்றும் நீங்கள் வேண்டுகின்ற பக்கம் போன்றவை உட்பட, உங்கள் கணிப்பொறி மற்றும் உலாவியிலிருந்து (browser) Yahoo! தனாகவே தகவல்களைப் பெற்று சேகரித்து வைக்கிறது.
கூடுதலாக, நீங்கள் Yahoo! சேவைகளை உபயோகிக்கும் போது, உங்கள் சொந்த தகவல்களில் சிலவற்றை நீங்கள் பொதுவாக வெளிக்காண்பித்தலையும் தேர்வு செய்து கொள்ளலாம். கூடுதலாக, நீங்கள் Yahoo! சேவைகளை உபயோகிக்கும் போது, உங்கள் சொந்த தகவல்களில் சிலவற்றை நீங்கள் பொதுவாக வெளிக்காண்பித்தலையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
பின்வரும் பொதுவான நோக்கங்களுக்காக Yahoo! தகவல்களை உபயோகிக்கிறது: நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை விரும்பத்தக்கதாக அமைக்க, தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான உங்களுடைய வேண்டுகோளை பூர்த்தி செய்ய, எமது சேவைகளை மேம்படுத்த, உங்களைத் தொடர்பு கொள்ள, ஆராய்ச்சி மேற்கொள்ள, மற்றும் உள் மற்றும் வெளி வாடிக்கையாளர்களுக்கு அடையாளமற்ற அறிக்கை வழங்க ஆகியவற்றுக்காக உபயோகிக்கலாம். பின்வரும் பொதுவான நோக்கங்களுக்காக Yahoo! தகவல்களை உபயோகிக்கிறது: நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கத்தை விரும்பத்தக்கதாக அமைக்க, தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான உங்களுடைய வேண்டுகோளை பூர்த்தி செய்ய, எமது சேவைகளை மேம்படுத்த, உங்களைத் தொடர்பு கொள்ள, ஆராய்ச்சி மேற்கொள்ள, உள் மற்றும் வெளி வாடிக்கையாளர்களுக்கு அடையாளமற்ற அறிக்கை வழங்க.
வயது வந்தவரின் அனுமதி பெறாமல் சிறப்பு ஆஃபர்கள் அல்லது வியாபார நோக்கங்களுக்காக 13 வயதுக்கும் குறைவான தனிநபர்களை Yahoo! தொடர்புகொள்வதில்லை.
Yahoo!, ஒரு குறிப்பிட்ட செயல்பாடு அல்லது விளம்பரத்தில் பங்கேற்பதற்கு அவசியம் என்ற நிலையைத் தவிர்த்து, பங்கேற்பதற்கான நிபந்தனை என்ற முறையில், 13 வயதுக்கும் குறைவான தனிநபரிடம் கூடுதல் சொந்தத் தகவல்களைக் கேட்பதில்லை.
எங்களுக்கு உங்களுக்கு அனுமதி இருக்கும் பட்சத்தில், நீங்கள் வேண்டிக் கொண்டுள்ள தயாரிப்புகள் அல்லது சேவைகள் வழங்குவதற்கு அல்லது பின்வரும் நிலைகளின் கீழ் போன்றவற்றைத் தவிர, உங்களைப் பற்றிய சொந்த தகவல்களை மற்றவர்களுடன் அல்லது கூட்டு-சேராத நிறுவனங்களுடன் Yahoo! வாடகைக்கு கொடுக்காது, விற்காது அல்லது பகிர்ந்து கொள்ளாது:
சொந்தத் தகவல்களின் அடிப்படையில் Yahoo! ஒரு நபருக்கு இலக்கான விளம்பரங்களை காட்டுகிறது. விளம்பரதாரர்கள் (விளம்பர சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் உட்பட) குறிப்பிட்ட விளம்பரத்திற்கு பதிலளிக்கின்ற, விளம்பரங்களைப் பார்க்கின்ற அல்லது அதன் மீது கிளிக் செய்கின்ற மக்கள் இலக்குக்கான தகுதிநிலைகளை அடைவதாக கருதக்கூடும் - எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சேர்ந்த 18-24 வயதான பெண்கள்.
Yahoo! வெவ்வேறு வியாபாரத் துறைகள் மற்றும் பிரிவுகளில் சேவை வழங்கும் வியாபாரிகள், கூட்டாளிகள், விளம்பரதாரர்கள், மற்ற சேவை வழங்குபவர்கள் ஆகியோர்களுடன் பணிபுரிகிறது. நீங்கள் வேண்டியுள்ள தயாரிப்புகள் அல்லது சேவைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு தயவுசெய்து எமது விபரமான மேற்கோள் தொடர்புகளை படியுங்கள்.
Yahoo!, உங்கள் கணினியில், Yahoo! குக்கீஸ்களை அமைத்து அவற்றை அணுகக்கூடும்.
எங்களது பக்கங்கள் சிலவற்றில் விளம்பரங்களைத் திரையிடுகின்ற மற்ற நிறுவனங்கள், உங்களுடைய கணினியில் அவர்களின் குக்கீஸ்களை அமைத்து அவற்றை அணுகுவதற்கு Yahoo! அனுமதிக்கிறது. மற்ற நிறுவனங்கள் அவர்களது குக்கீஸ்களை உபயோகிப்பது அவர்களுடைய சொந்த இரகசியக்காப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டது, இந்த இரகசியக்காப்பின் கீழ் வராது. விளம்பரதாரர்கள் அல்லது மற்ற நிறுவனங்கள் Yahoo!’வின் குக்கீஸ்களுக்கான அணுகலை கொண்டிருப்பதில்லை.
எங்களது இணையதளங்களின் நெட்வொர்க்கிற்கு உள்ளேயும் வெளியேயும் அத்துடன், Yahoo! தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு தொடர்புடையதுமான Yahoo! குக்கீஸ்களை அணுகுவதற்கு, Yahoo! வெப் பீகன்ஸ்களை உபயோகிக்கிறது.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும், உங்களுடைய மார்கெட்டிங் முன்னுரிமைகள் உட்பட, உங்களுடைய Yahoo! கணக்கு தகவல்களை நீங்கள் திருத்திக்கொள்ளலாம்.
மார்க்கெட்டின் முன்னுரிமைகள் பக்கத்தில், அவ்வப்போது, மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளின் புதிய வகைகள் சேர்க்கப்படக்கூடும். இந்த பக்கத்தை பார்வையிடும் பயனர்கள், இத்தகைய புதிய வகை எதிர்கால வியாபாரம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு தேர்வு செய்துகொள்ளலாம் அல்லது தாங்கள் பெறும் செய்திகளிலுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் சந்தாவிலக்கிக் கொள்ளலாம்.
சேவை அறிக்கைகள், நிர்வாகச் செய்திகள், Yahoo! செய்தித்தாள் போன்ற உங்களுடைய கணக்கின் ஒரு பகுதியாக கருதப்படும் Yahoo! சேவைகள் தொடர்பானத் தகவல்களை பெறுவது தொடர்பாக தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்காமல், அவற்றை உங்களுக்கு அனுப்புவதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம்.
எமது கணக்கு அழித்திடுக பக்கத்திற்குச் செல்வதன் மூலம் நீங்கள் உங்களுடைய Yahoo! கணக்கை அழித்துக் கொள்ளலாம். உங்களுடையகணக்கு அழிக்கப்பட்ட பிறகு எங்களுடைய ஆவணகாப்பு செய்யப்படும் பதிவுகளில் சாத்தியமாக இருக்கக்கூடிய தகவல்களைப் பற்றி படிக்க தயவுசெய்து இங்கு கிளிக் செய்யவும்.
Yahoo! குடும்ப கணக்குகளால் வழங்கப்படும் கருவிகளை உபயோகித்து பெற்றோர்கள் அவர்களது குழந்தையின் Yahoo! கணக்கு பற்றிய தகவல்களை சரிபார்த்து, திருத்தி மற்றும் அழித்துக் கொள்ளலாம்.
குழந்தையைப் பற்றிய தகவல்களை நாங்கள் மேற்கொண்டு சேகரிக்க அல்லது உபயோகிக்க வேண்டாமென பெற்றோர் தேர்வு செய்யும் பட்சத்தில், Yahoo! குடும்ப கணக்குகளில் பதிவு செய்துள்ள பெற்றோர்கள், தங்களுடைய குழந்தையின் கணக்கில் உள்நுழைந்து பிறகு எங்களது கணக்கு அழித்திடுக பக்கத்திற்கு செல்வதன் வாயிலாக தங்களது குழந்தையின் கணக்கை அழிக்கலாம். உங்களுடைய கணக்கு அழிக்கப்பட்ட பிறகு எங்களுடைய ஆவணகாப்புசெய்யப்பட்ட பதிவுகளில் சாத்தியமாக இருக்கக்கூடிய தகவல்களைப் பற்றி படிக்க தயவுசெய்து இங்கு கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்கு அல்லது தங்களது வேலைகளை செய்வதற்கு, தகவல்களுடன் உங்களது தொடர்புகொள்ளவேண்டியுள்ளதாக நாங்கள் நம்புகின்ற பணியாளர்களுக்கு, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களுக்கான அணுகலை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.
உங்களைப் பற்றிய சொந்தத் தகவல்களைப் பாதுகாக்க மத்திய ஒழுங்குமுறைகளுக்கு இணங்குகின்ற, உடல்சார்ந்த, எலக்டிரானிக், மற்றும் செய்முறைகள் சார்ந்த பாதுகாப்புகளை நாங்கள் கொண்டுள்ளோம்.
நாங்கள் எடுத்துள்ள பாதுகாப்பு படிகள் மற்றும் நீங்கள் எடுக்கக்கூடிய பாதுகாப்பு படிகள் உட்பட பாதுகாப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள, தயவுசெய்து Yahoo!விலுள்ள பாதுகாப்பு பக்கத்தை படியுங்கள்.
Yahoo! இக்கொள்கையை புதுப்பிக்கக்கூடும். உங்கள் Yahoo! கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள முதன்மை மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அறிவிப்பு அனுப்புவதன் மூலம் அல்லது எங்களது இணையதளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வைப்பதன் மூலம், சொந்த தகவல்களை கையாளுவதில் உள்ள முக்கியமான மாற்றங்கள் பற்றி உங்களுக்குத் தெரிவிப்போம்.
உங்களிடம் கேள்விகள் அல்லது விமர்சனங்கள் இருந்தால், தயவுசெய்து ஒரு பின்னூட்டக் கருத்துப் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள் அல்லது எங்களை இதில் தொடர்பு கொள்ளுங்கள்:
Yahoo India Private Limited
யூனிட் எண். 1261, 6வது மாடி, பில்டிங் எண். 12,
(அந்தேரி-காட்கோபர் லிங்க் ரோடு),
அந்தேரி (கிழக்கு), மும்பை - 400 093
கடைசியாக புதுப்பித்தது: 6/14/12
