Yahoo! தேடல்
Yahoo! இரகசியக்காப்புக் கொள்கை

Yahoo! இரகசியக்காப்புக் கொள்கை

Yahoo! இரகசியக்காப்புக் கொள்கை Yahoo! இரகசியக்காப்புக் கொள்கை
Yahoo! மொபைல்

More Help Links

Yahoo! மொபைல்

Yahoo! உங்களது அந்தரங்கத்தை அக்கறையுடன் கையாள்கிறது. இந்த மேலோட்டப்பார்வையானது Yahoo! ’வின் முக்கிய மொபைல் அந்தரங்க நடைமுறைகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவவேண்டும். எங்களது அந்தரங்க நடைமுறைகள் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து, Yahoo! அந்தரங்கக் கொள்கையைப் பார்க்கவும்.

1. மொபைல் முகப்புப்பக்கத்தின் தனிப்பயனாக்கம்
2. மொபைல் சாதன தனித்துவ அடையாளங்காட்டி
3. பௌதிக இருப்பிடம்
4. தகவல் வெளிப்படுத்தல்
5. சட்டபூர்வ செயல்முறை
6. கணக்குத் தகவல் மற்றும் முன்னுரிமைகள்
7. மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் நிரல் பலகைகள்
8. விளம்பரப்படுத்தல்
9. மெசெஞ்சர்
10. தேடல்
11. ஏனையவை

1. மொபைல் முகப்புப்பக்கத்தின் தனிப்பயனாக்கம்

Yahoo! ’வின் மொபைல் முகப்புப்பக்கமானது, தங்களது இருப்பிடம், பாதுகாப்பான தேடல் அமைப்புகள், மற்றும் பிடித்த நிரல் பலகைகள் போன்ற முன்னுரிமைகளை சேமிக்க பயனர்களை அனுமதிக்கிறது. Yahoo! இந்தத் விருப்பத்தேர்வுகளை ஓர் Yahoo! ID (அடையாளக்குறியீடு) அல்லது மொபைல் சாதனத்துடன் இணைக்கும், மேலும், நீங்கள் இந்த விருப்பத்தேர்வுகளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மொபைல் முகப்புப்பக்கத்தில் திருத்தலாம். நீங்கள் மொபைல் முகப்புப்பக்க விருப்பத்தேர்வுகளை அமைத்து, ஆனால் Yahoo! ’வில் உள்நுழைவதை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், இந்தப் பக்கத்தின் அடியிலுள்ள விருப்பத்தேர்வை-அழித்தல் என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இந்த விருப்பத் தேர்வுகளை அழிக்கலாம்.

2. மொபைல் சாதன தனித்துவ அடையாளங்காட்டி

Yahoo! -உடன், உங்கள் மொபைல் சாதனத்தை தனித்துவமாக அடையாளங்காண்கின்ற ஓர் சேவை வழங்குநர் வழியாக இணைக்கின்றபோது, இந்த அடையாளங்காணலை Yahoo! பெற்றுக்கொண்டு, விரிவுபடுத்திய சேவைகள் மற்றும்/அல்லது செயலம்சங்களை வழங்க அதைப் பயன்படுத்தக்கூடும். Yahoo! ஆனது, நம்பகத்தன்மை ஒப்பந்தங்களின்கீழ் எங்கள் சார்பாகப் பணிபுரியும் நம்பிக்கையான பங்குதாரர்களுக்கு இந்த சாதன அடையாளங்காட்டிகளை வெளிப்படுத்தக்கூடும். இப்பங்குதாரர்கள், உங்களுக்கு தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குவதற்காக, Yahoo! –க்கு உதவுவதற்கு இந்தத் தகவலைப் பயன்படுத்தக்கூடும். குறிப்பிட்ட சில Yahoo! சேவைகளுக்கு, உங்கள் தொலைபேசி எண் தொடர்பான எங்கள் சேகரிப்பு தேவைப்படக்கூடும். நாங்கள், அந்த தொலைபேசி எண்ணை மொபைல் சாதன அடையாளங்காணல் தகவலுடன் இணைக்கலாம். இருப்பினும், நீங்கள் எங்களுக்கு அனுமதி தந்தால் அன்றி, அந்த தொலைபேசி எண்ணை நாங்கள் டெலிமார்க்கெட்டிங்கிற்காக பயன்படுத்தமாட்டோம்.

3. பௌதிக இருப்பிடம்

GPS, Wi-Fi, அல்லது மிக அருகிலுள்ள செல் கோபுரம் போன்ற தொழில்நுட்பங்களில் இருந்து மிக நுட்பமாக விவரிக்கப்படும் பௌதிக இருப்பிடத் தகவலை Yahoo! பெறுவதற்கு முன்னர், நீங்கள் முதலில் உங்கள் சாதனம் அல்லது பிரவுசர் வழியாக அல்லது Yahoo! ’விடம் நேரடியாக அனுமதி வழங்கவேண்டும். உங்கள் சாதனத்தில் இருந்து, மிக நுட்பமாக விவரிக்கப்படும் பௌதிக இருப்பிடத் தகவலைப் பெறுவதற்கு Yahoo! ’விற்கு நீங்கள் வழங்கிய அனுமதியை உங்களால் திரும்பப்பெற்றுக் கொள்ளஇயலும், ஆனால், நீங்கள் பயன்படுத்துகின்ற Yahoo! தயாரிப்பு அல்லது சேவையுடன் இணைக்கப்படும் சாதனம் அல்லது பிரவுசரைப் பொறுத்து, இருப்பிட தகவல் அனுமதிகள் Yahoo! ’வால் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கக்கூடும். உங்கள் சாதனத்தில் இருப்பிட அனுமதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வது பற்றி மேலும் அறிய, தயவுசெய்து லொக்கேஷன் ஆப்ட்-அவுட் உதவிப் பக்கத்தைப் பார்வையிடவும். பெற்றுக்கொண்டதும், விரிவாக்கப்பட்ட இருப்பிட அடிப்படையான சேவைகளை வழங்க, இருப்பிட-இலக்கான விளப்பரப்படுத்தலைச் செய்ய, முடிவுகளையும் பிற உள்ளடக்கத்தையும் தேட, உங்கள் கேரியரால் அல்லது Yahoo! ’வில் நீங்கள் பதிவுசெய்த நேரத்தில் உங்களால் வழங்கப்பட்ட பில்லிங் அஞ்சல் குறியீடு, IP முகவரி போன்ற பிற இருப்பிட-அடிப்படையான தகவல்களுடன் சேர்த்து இத்தகவலையும் Yahoo! பயன்படுத்தவும் சேமிக்கவும் கூடும்.

4. தகவல் வெளிப்படுத்தல்

நீங்கள் கோரிக்கை விடுத்துள்ள தயாரிப்புகள் அல்லது சேவைகளை வழங்க அல்லது பின்வரும் சந்தர்ப்பங்களின் கீழ் தவிர, Yahoo! ஏனையவர்களுடன் அல்லது உறுப்புரிமை பெறாத நிறுவனங்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வாடகைக்கு விட, விற்பனை செய்ய, அல்லது பகிர்ந்துகொள்ளமாட்டாது:

  • நம்பகத்தன்மை ஒப்பந்தங்களின்கீழ் Yahoo! சார்பாக அல்லது Yahoo! -உடன் பணிபுரியும் நம்பிக்கையான பங்குதாரர்களுக்கு தகவல்களை வழங்குகிறோம். Yahoo! மற்றும் எங்கள் சந்தைப்படுத்தும் பங்குதாரங்களிடம் இருந்து கிடைக்கும் சலுகைகளைப் பற்றி உங்களுடன் தகவல்தொடர்பை ஏற்படுத்த Yahoo! -க்கு உதவுவதற்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை இந்நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடும். இருப்பினும், இந்நிறுவனங்களுக்கு, இத்தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான சுய உரிமை எதுவும் கிடையாது.
  • எங்களை வேறொரு நிறுவனம் பெற்றது அல்லது வேறொரு நிறுவனத்துடன் ஒன்றிணைந்தோம். இந்நிகழ்வில், உங்கள் தகவல் இடமாற்றப்படுவதற்கும் ஓர் வேறுபட்ட அந்தரங்கக் கொள்கைக்கு உட்படுவதற்கும் முன்னர், Yahoo! உங்களுக்குத் தெரியப்படுத்தும்.

5. சட்டபூர்வ செயல்முறை

சட்டவிரோதமான செயற்பாடுகள், சந்தேகத்துக்குரிய மோசடி, ஏதேனும் நபரின் உடல்ரீதியான பாதுகாப்புக்கு சாத்தியமான அச்சுறுத்தல்களில் அல்லது Yahoo! ’வின் சேவை விதிமுறைகளின் மீறல்களில் ஈடுபடுவதை உள்ளடக்கிய அவசரகாலச் சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு எதிராக, அல்லது சட்டத்துக்குத் தேவைப்படும்விதத்தில் விசாரணை நடத்த, தடுக்க அல்லது நடவடிக்கை எடுப்பதற்காக தான் தகவலைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று Yahoo! நம்புகிறது. நீதிமன்ற அழைப்பாணைகள், நீதிமன்ற உத்தரவுகள், அல்லது சட்டப்பூர்வ செயலாக்கங்களுக்கு பதிலளிக்கையில், அல்லது எங்கள் சட்டப்பூர்வ உரிமைகளை நியமிக்க அல்லது செயற்படுத்த அல்லது சட்டப்பூர்வ கோரிக்கைகளுக்கு எதிராக தற்காப்பு அளிக்க தகவல்களை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்.

6. கணக்குத் தகவல் மற்றும் முன்னுரிமைகள்

நீங்கள் எந்த நேரத்திலும் ஒரு கணினியில் உங்கள் சந்தைப்படுத்தல் விருப்பத்தேர்வுகள் உள்ளடங்கலான உங்கள் Yahoo! கணக்குத் தகவல்களைத் திருத்தலாம். நீங்கள் உள்நுழைந்திருக்கவில்லை என்றால், மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தும்போது, Yahoo! சேவைகள் அல்லது கருவிகளின் முழுமையான செயலம்சங்களை நீங்கள் அணுகுவதை சேவை வரம்புகள் தடுக்கக்கூடும். இச்சந்தர்ப்பத்தில், நீங்கள் Yahoo! உடன் இணைக்க ஒரு கணினியைப் பயன்படுத்த வேண்டி இருக்கலாம்.

7. மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் நிரல் பலகைகள்

Yahoo! ’வானது, மூன்றாம் தரப்பு மொபைல் பயன்பாடுகள்/நிரல் பலகைகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடும். ஓர் மூன்றாம் தரப்பு பயன்பாடு அல்லது நிரல் பலகையை நீங்கள் சேர்க்கும் பட்சத்தில், உங்கள் நாடு, விருப்பமான மொழி, உங்கள் மொபைல் கேரியர், சாதன வகை மற்றும் உலாவி வகை போன்ற தகவல்கள் எங்களிடம் இருந்தால் நாங்கள் அவற்றைப் பகிர்ந்துகொள்ளக்கூடும். மூன்றாம் தரப்புப் பயன்பாடுகள் அல்லது நிரல் பலகைகளும் கூட குக்கீகளை அமைக்கக்கூடும். இத்தரவைப் பகிர்ந்துகொள்ள Yahoo! அனுமதியை வழங்குவதன் மூலமாக, ஓர் மூன்றாம் தரப்பு பயன்பாடு/நிரல் பலகை உருவாக்குனருக்கு உங்கள் தற்போதைய இருப்பிடத் தகவலைக் கிடைக்கச் செய்யுமாறு நீங்கள் தேர்வுசெய்யலாம். மூன்றாம் தரப்பினரின் குக்கீகளின் பயன் மற்றும் அவர்களுக்கு நீங்கள் வழங்கும் தகவல்களும், Yahoo! தனியுரிமைக் கொள்கைக்கு அல்லது Yahoo! மொபைல் தனியுரிமைக் கொள்கைக்கு அல்லாமல் அவர்களின் சொந்த தனியுரிமைக் கொள்கைகளுக்கே உள்ளாகும் என்பதைத் தயவுசெய்து குறித்துக்கொள்ளவும்.

8. விளம்பரப்படுத்தல்

நீங்கள் Yahoo! தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும்போதும், பிராண்டட் Yahoo! வலைத்தளங்களின் நெட்வொர்க்குக்குச் செல்லும்போதும், Yahoo! பங்குதாரர்களின் வலைத்தளங்களுக்குச் செல்லும்போதும், உங்கள் செயற்பாட்டின் அடிப்படையில் உங்கள் விருப்பங்களைப் பற்றிய தகவல்களை Yahoo! சேகரித்துப் பேணுகிறது. உங்களது விருப்பங்கள் தொடர்பான விளம்பரங்களையும், உள்ளடக்கத்தையும் அனுப்புவதற்கு இத்தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். Yahoo! ’வால் வழங்கப்படும் விருப்ப-அடிப்படையான விளம்பரப்படுத்தலை அல்லது உள்ளடக்கத்தைப் பெறுவதை விலக்கிக்கொள்ளக்கூடிய ஆற்றலை Yahoo! உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து விருப்ப-அடிப்படையான விளம்பரப்படுத்தலையும் உள்ளடக்கத்தையும் பெறுவதை விலக்கிக்கொள்ள, எங்கள் ஆட் மேட்சிங் விலகிக்கொள்ளல் கருவியைப் பயன்படுத்துவதற்கு முன்னர், நீங்கள் முதலில் உங்கள் மொபைல் சாதனத்தில் உங்கள் Yahoo! கணக்கிற்கு உள்நுழையவேண்டும். உங்களால், Yahoo! ’வின் ஆட் இண்டரெஸ்ட் மேனேஜர் கருவியில் உங்களது விருப்ப-அடிப்படையான வகைகளை நிர்வகிக்கவோ அல்லது அனைத்து வகைகளையும் விலக்கிக்கொள்ளவோமுடியும். உங்கள் மொபைல் சாதனத்துக்குப் பொருந்துகின்ற ஆட் இண்டரெஸ்ட் மேனேஜரில் உங்கள் அமைப்புகளைச் உருவாக்குவதற்கு, உங்கள் Yahoo! கணக்கில் நீங்கள் அவசியம் உள்நுழைந்திருக்கவேண்டும்.

9. Yahoo! மெசெஞ்சர்

Yahoo! மெசெஞ்சர் செய்தி வரலாற்றை வழங்குகிறது, இது தயாரிப்பின் தேர்ந்தெடுத்த பதிப்புகளில் கிடைக்கிறது, இது உங்கள் Yahoo! கணக்கிலிருந்தான IM உரையாடல்களை எங்கள் Yahoo! சேவையகங்களில் சேமிக்கிறது. Yahoo! மெசெஞ்சரின் சில பதிப்புகளும்கூட, Yahoo! அஞ்சலைப் போன்று முக்கிய சொற்களுக்காக உங்கள் செய்திகளை ஸ்கேன் செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து Yahoo! மெசெஞ்சர் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

10. தேடல்

சில சந்தைகளில், Yahoo, தனது தேடல் மற்றும் ஸ்பான்சர் செய்த தேடல் சேவைகளை Microsoft -உடன் ஒருங்கிணைத்துள்ளது. மேலும் அறிய, தயவுசெய்து Yahoo! தேடல் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

11. ஏனையவை

ஏதேனும் மொபைல் சாதனத்திலிருந்து நீங்கள் Yahoo! ’வை அணுகும்போது, Yahoo! சேவை விதிமுறைகளுக்கு உள்ளாகுகிறீர்கள். இந்த சேவை அல்லது Yahoo! மொபைல் பற்றி உங்களிடம் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து Yahoo! மொபைல் உதவிப் பக்கத்தைப் பார்க்கவும்.

இக்குறிப்பிட்ட சேவை தொடர்பான தற்போதைய Yahoo! நடைமுறைகளை இப்பக்கம் விவரிக்கிறது. அம்சங்களைச் சேர்ப்பதன் அல்லது அகற்றுவதன்மூலம் அல்லது வேறுபட்ட சேவை வழங்குநர்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தச் சேவையை Yahoo! சரிபார்த்துத் திருத்துவதால் இத்தகவல் மாறக்கூடும். உங்கள் தனிப்பட்ட தகவல்களை Yahoo! எவ்வாறு கையாளுகிறது என்பதைக் கண்டறிய, தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

பதிப்புரிமை © 2013 Yahoo! India Pvt Ltd. அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை.

தகவல் பாதுகாப்புக் கொள்கை | சேவை விதிகள் | பதிப்புரிமை/ஐபி கொள்கை